fbpx
Homeபிற செய்திகள்அவலாஞ்சி டிரவுட் மீன் பண்ணை ரூ.2.50 கோடியில் நவீனமயம்- உதகை ஆட்சியர் அருணா ஆய்வு

அவலாஞ்சி டிரவுட் மீன் பண்ணை ரூ.2.50 கோடியில் நவீனமயம்- உதகை ஆட்சியர் அருணா ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில், குந்தா வட்டம், அவலாஞ்சி டிரவுட் மீன் பண்ணையில் ரூ.2.50 கோடி மதிப் பீட்டில் நவீனமயமாக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.அருணா பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

முதல்வர், பொதுமக்களின் நலன்கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரு கிறார்.
நமது மாவட்டத்திலும் பல்வேறு துறைகளின் சார்பில், மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேவையான இடங்களில் சம்மந்தப்பட்ட துறைகளின் சார்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், புதிய வசதிகளை ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.

அந்த வகையில் இன்று குந்தா வட்டம், அவலாஞ்சி பகுதியில் செயல்பட்டு வரும் டிரவுட் மீன் பண்ணையில் ‘மீன் வளம் மற்றும் நீர்வாழ்உயிரின வளர்ப்பு உட்கட்ட மைப்பு மேம்பாட்டு நிதியின்கீழ்’ (2022-2023) ரூ.2.50 கோடி மதிப்பீட் டில் நவீன மயமாக்கப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இணைப்பு பாலம், சாலை, தடுப்பணை, சினை மீன் தொட்டிகள், டிரவுட் மீன் குஞ்சு பொரிப்பகம், தடுப்புச்சுவர் மற்றும் மின்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜோதி லக்ஷ்மணன், உதகை மீன்துறை ஆய்வாளர் ஷில்பா, மீன்துறை சார் ஆய்வாளர் ஆனந்த் உட்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img