fbpx
Homeபிற செய்திகள்‘ஆஸ்டன் மார்ட்டின் டிபி12’ அறிமுகம்

‘ஆஸ்டன் மார்ட்டின் டிபி12’ அறிமுகம்

உலகளவில் பிரபலமான பிரிட்டிஷ் அல்ட்ரா-லக்ஸுரி – ஹை பெர்ஃபார்மன்ஸ் ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி நிறுவனமான ஆஸ்டன் மார்ட்டின், இந்தியாவில் ஆஸ்டன் மார்ட்டின் DB12 ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்திய வாகன உற்பத்தித் துறையில் புதிய அலைகளை ஏற்படுத்த உள்ளது.

உலகின் முதல் சூப்பர் டூரரான ஆஸ்டன் மார்ட்டின் DB12 இன் ஆரம்ப விலை, தனிப்பயனாக்கும் விருப்பங்களைச் சேர்க்காமல் 4.59 கோடி ரூபாய் ஆகும்.
ஆசியா, ஆஸ்டன் மார்ட்டின், பிராந்தியத் தலைவர் கிரிகோரி ஆடம்ஸ் பேசியதாவது:

110-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2023-ம் ஆண்டில் உண்மையான ஆட்டத்தை மாற்றியமைக்கும் மாடலான ஆஸ்டன் மார்ட்டின் DB12 இன் அறிமுகத்தின் உதவியுடன், ஆஸ்டன் மார்ட்டின் முன் எப்போதையும் விட மிகப் பிரகாசமாக ஜொலிக்கிறது.

110 ஆண்டுகளாக, ஆஸ்டன் மார்ட்டினின் சின்னமான இறக்கைகள் புதுமைக்கும், கைவினைத் திறனுக்கும் ஒரு அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது. மார்க்கின் அல்ட்ரா-லக்ஸுரி, ஹை பெர்ஃபார்மன்ஸ் ஸ்போர்ட்ஸ் கார்கள் உலகளவில் விரும்பப்படுகின்றன, இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

எங்களுடைய அல்ட்ரா-லக்ஸுரி SUV-கள், DBX, DBX707 ஆகியவற்றில் இருந்து வான்டேஜ் ஸ்போர்ட்ஸ் கார்கள் மற்றும் இப்போது உலகின் முதல் சூப்பர் டூரரான DB12 வரையிலான முழு ஆஸ்டன் மார்ட்டினின் வரிசையையும் வாடிக்கையாளர்கள் அனுபவிப்பதற்காக வழங்கும் வகையில் வளர்ந்துள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img