fbpx
Homeபிற செய்திகள்2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கல்

2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கல்

கரூரில், கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்க திட்டப்பணியை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சரஸ்வதி வெங்கட் ராமன் மஹாலில் நடைபெற்ற விழா நிகழ்வில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Card) வழங்கினார்.

பின்னர், ஆட்சியர் தங்கவேல் பேசியதாவது:
மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் 7.35 லட்சம் பேருக்கு 2-வது கட்டமாக உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இவர்களுக்கு பணம் அனுப்பி வைக்கும் திட்டத்தை முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்தார்.

1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி இந்த பணம் வரவு வைக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை யொட்டி நேற்று (நவ.10) முதல் உரிமைத் தொகையை வரவு வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பித்த சுமார் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது. இவர்கள் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டதுடன், நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டும், நியாயமான காரணம் இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் என் றும் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சுமார் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர். இவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது.

இந்த பணி தற்போது முடிவடைந்து அதன்படி, மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் சுமார் 7.35 லட்சம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப் பட்டு, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த 7.35 லட்சம் பேருக்கும் வங்கிக் கணக்கில் ரூ.1000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பெரும்பாலானோருக்கு நேற்று முதலே அவர்கள் வங்கி கணக்கிற்கு ரூ.1000 அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் 2-ம் கட்ட மாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் இந்த மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் திட் டத்தின் கீழ் ரூ.1000 பயன் பெற உள்ளனர் என்றார்.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன்,மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கூட்டுறவு மண்டல இணைப்ப திவாளர் கந்தராஜா, மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், தனித்துணை ஆட்சியர்(சபாதி) சைபுதீன், வருவாய் கோட்டாட் சியர்கள் ரூபினா(கரூர்), ரவிசந்திரன்( குளித்தலை), மாமன்ற உறுப்பினர் சாந்திபாலாஜி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img