அயோத்தியில் இன்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி இந்து அமைப்புகளின் சார்பில் பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2024 கிலோ ஐஸ் கட்டியில் ஜெய் ஸ்ரீ ராம் எழுத்து வடிவிலான அமைப்பை தேனி முல்லை நகரில் அமைத்திருந்தனர்.
தட்சிணாமூர்த்தி கோவிலில் எம்.எம். பல் மருத்துவமனை நிர்வாக இயக்குனருமான பாரதிய ஜனதா கட்சி மருத்துவ பிரிவைச் சேர்ந்தவருமான டாக்டர் பாஸ்கரன் தலைமையில் ஏசிவி மில் குழுமம் சந்திரசேகரன் முன்னிலையில் இதனைச் செய்திருந்தனர்.
பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்துடன் ஒலி எழுப்பி பக்தர்கள் தரிசனம் செய்தனர். 2024 கிலோ கொண்ட ஐஸ் கட்டியில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகத்தை காய்கறி சிற்பி இளஞ்செழியன் இரண்டு மணி நேரத்தில் வடிவமைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் டாக்டர் நாராயண பிரபு கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளர் மனோகரன், மாவட்டச் செயலாளர் விவசாய பிரிவு டாக்டர் ஆனந்த பத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.