மகாத்மா காந்தியடி களின் நினைவு நாளை யொட்டி கோவை பாப்பநாயக்கன் பாளையம் காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஒற்றுமை மேடை (கோவை) சார்பில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் ஒற்றுமை மேடை கோவை ஒருங்கிணைப்பாளர் யூ.கே.சிவஞானம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் ஆகியோர் மதங்களை கடந்து மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சிறப்புரை நிகழ்த்தினர்.
இதில் மார்க்சிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் பூபதி,கண்ணகி ஜோதிபாசு, சி.பி.எம்.கிழக்கு நகரக்குழு செயலாளர் செல்வம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோவை மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர் சுதா, ஜோதிமணி, எழுத்த £ளர் கலைஞர்கள் சங்க கோவை மாவட்ட தலைவர் தி.மணி, புரட்சிகர இளைஞர் முண்ணனி மலரவன்,தமிழ்நாடு திராவிடர் தமிழர் கட்சி செந்தில்குமார். திராவிட சுயமரியாதை கழகம் நேருதாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆனைமலை ஒன்றிய குழு சார்பில் அண்ணா நகர் பகுதியில் மகாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தாலுகா செயலாளர் சுரேஷ் மற்றும் தோழர்கள் பவித்ரா, ராஜேஷ், கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை டவுன் ஹால் மாநகராட்சி அலுவலகம் முன்பு காந்தியடிகளின் நினைவு நாள் அனுச ரிக்கப்பட்டது.
இதில் மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப் பட்டது.
இந்நிகழ்வில் சிஐடியுவின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா, மேற்கு நகர குழு செயலாளர் முருகன், மேற்கு நகர குழு உறுப்பினர் பரமேஸ்வரன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் ரத்தீஷ், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.