தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பாக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை 4மணிக்கு மௌன அஞ்சலி ஊர்வலம் தென்பாக காவல் நிலையம் முன். தந்தை பெரியார் சிலையில் தொடங்கி விவிடி திடல் வரை நடைபெற்றது. அதன் பின் அங்கு விஜயகாந்துக்கு புகழ் வணக்கம் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், மந்திரமூர்த்தி முன்னிலையிலும் நிகழ்ச்சி அமைப்பு குழு விஜயன், மாவட்ட பொருளாளர், வல்லரசு, மதுரை மாவட்ட துணை செயலாளர், பகுதி செயலாளர்கள், நாராய ணமூர்த்தி, அரசமுத்து, தலைமை செயற்குழு உறுப்பினர், ராஜபொம்மு, பொதுகுழு உறுப்பினர்கள், சின்னதுரை, செல்வம், உதவி அமைப்பு குழு ராதா கிருஷ்ணன், மாவட்ட தொழிற்சங்க தலைவர், சரவணன் பகுதி துணை செயலாளர், வட்ட கழக செயலாளர்கள், இருளப்ப சாமி, சுப்பு, ஆதிலிங்கம் முலம் நடைபெற்றது.
இதில் மாநகர் மாவட்ட, ஒன்றிய, மாநகர பகுதி, ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மகளிர் அணியினர் கழக தோழர்கள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன், அமைப்பு செயலாளர் சின்னதுரை, சுதாகர், திமுக ஆறுமுகம், மாவட்ட அவைதலைவர்
ராஜ்மோகன்செல்வின் (மாவட்ட துணை செயலாளர்), பாஜக மாநில துணை தலைவர் சசிகலாபுஷ்பா (முன்னாள் எம்பி), மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாநில நிர்வாகி விவேகம்-ரமேஷ், இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், மதிமுக மாவட்ட செயலாளர் புதுகோட்டைசெல்வம், மாவட்ட துணைசெயலாளர் செல்லசாமி, மாநகர செயலாளர் முருகபூபதி, மாநில நிர்வாகி நக்கீரன், மகாராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் ராஜா, இ.கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் ஞானசேகரன், ஐஜேகே கட்சி தென்மண்டல செயலாளர் அருணா தேவி பாண்டியன், ஓபிஎஸ் அணி மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை, அமமுக மாநகர் மாவட்ட செயலாளர் பிரைட்டர், ச.ம.கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், விசிக மத்திய மாவட்ட செயலாளர் கணேசன், ம.நீ.ம. மத்திய மாவட்ட செயலாளர் ஜெவகர், மாவட்ட துணைசெயலாளர் அக்பர், அ.இ.ச.ம. கட்சி மாவட்ட செயலாளர் வில்சன், த.மு.மு.க -ம.ம.க மாவட்ட அமைப்பாளர் இக்பால், மாவட்ட நிர்வாகி சேக், சுலைமான், நூர், ஷாருக்கான், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சரவணகுமார், த.வா. கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, த.ம.மு.க. மாவட்ட கழக செயலாளர் லாரன்ஸ், லட்சிய தி.மு.க. மாவட்ட கழக செயலாளர், சிம்புகண்ணன், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார், திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வல்லபாய் பட்டேல், நாகராஜன், ஜனதா தளம் மாவட்ட தலைவர் பாண்டி, மாநகர செயலாளர் சரவணகுமார், அம்ஜத், திமுக சுசி ரவீந்திரன், மதிமுக இளைஞரணி அமைப்ப £ளர் சரவண பெருமாள், பறையர் பேரவை தலைவர் இளவரசபாண்டியன், ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த், சமுதாய அமைப்புகள் பண்பாட்டு கழகம் வலசை கண்ணன், வண்ணார் கழகம் சண்முகசுந்தரம், விஷ்வகர்மா சங்கம் நாராயணமூர்த்தி, விக்ரம் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ராசு, மாநகர தலைவர் ஆனந்த், சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் முத்துகுமார், சசிகுமார் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் சுப்புராஜ், சிம்பு ரசிகர் மன்ற மாவட்ட பொருளாளர் செல்வம், ஜெயம்ரவி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.