fbpx
Homeபிற செய்திகள்கரூரில் ரூ.47 லட்சத்தில் வளர்ச்சித் திட்ட பணியை துவக்கினார், எம்எல்ஏ சிவகாமசுந்தரி

கரூரில் ரூ.47 லட்சத்தில் வளர்ச்சித் திட்ட பணியை துவக்கினார், எம்எல்ஏ சிவகாமசுந்தரி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாந்தோணி ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியிலும், கோயம்பள்ளி ஊராட்சியில் உள்ள கோயம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் எம் எல் ஏ சிவகாமசுந்தரி தலைமையில் MGNRGS திட்டத்தில் தலா ரூ.17.42 லட்சம் என மொத்தம் 34 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் 2 மைதானம் அமைப்பதற்கான பூமி பூஜை அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் பங்கேற்று அதற் கான பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவ காமசுந்தரி.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணராயபுரம் தொகு திக்குட்பட்ட வடக்கு பாளையம் பகுதியில் உள்ள அருந்ததியினர் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டில் சிறிய சமுதாயக்கூடம் அமைப்பதற்கான பூமி பூஜையிலும் பங்கேற்று அதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக துணை செயலாளர் ரமேஷ் பாபு, தாந்தோணி ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர்

ஜெகதீசன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பிரபு, தாந்தோணி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகாமி வேலுச்சாமி, தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், கோயம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா மயில்சாமி, பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img