fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மாரத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு ரூ.68 ஆயிரம் பரிசு

கோவையில் மாரத்தான் போட்டியில் வென்றவர்களுக்கு ரூ.68 ஆயிரம் பரிசு

கோவையில் “அப்டவுன் கன்ஃபிடிட்டி” சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ரன் ஃபார் கேன்சர் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடை பெற்றது.

இந்தப் போட்டிகளை தமிழ்நாடு காவல், கோவை மாநகர பிரிவின் ஹோம் கார்ட்ஸ், டெபுட்டி ஏரியா கமாண்டரும், நேச்சுரல் சயின்ஸ் ஃபவுண்டேஷன் இயக்குனரும் அயன் புல் கன்சல்டிங் தலைமை நிர்வாக அதிகாரியும் மற்றும் சக்திராம் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலருமான தேன்மொழி ராஜாராம், புரோடிஜி சர்வதேச மாண்டிச்சேரி பள்ளியின் கோ ஃபவுண்டர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஜெயின் அரவிந்த் மற்றும் புட்லூஸ் எட்வின்’ஸ் டான்ஸ் ஸ்கூல் பவுண்டரும், டான்ஸ் குரோரியோகிராபர், கஸ்டியும் டிசைனரும் பிட்னஸ் இன்ஸ்ட்ரக்டருமான எட்வின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை கொடிய சைத்து துவக்கி வைத்தனர்.

1 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என்று 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் 2000-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மொத்தம் பரிசு தொகையாக ரூ.68 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்டவுன் கன்ஃபிடிட்டி நிர்வாகிகள் சுபா மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img