தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பொரத்தூரில் செயல்பட்டு வரும் பாரத ரத்னா, புரட்சி தலைவர் டாக்டர் . எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் கிராம புறத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், தினமும் நீண்ட தூரம் பயணத்து கல்லூரிக்கு வருவதால் இம்மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில் கல்லூரி விடுதி வேண்டி பாலக்கோடு சட்டமன்ற உறுப்பிணர் கே.பி.அன்பழகன் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், பொரத்தூர் சாலையில் 3 கோடி 18 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1324 சதுர மீட்டர் பரப்பளவில் 100 மாணவர்களுக்கு தேவையான படுக்கை வசதி, உணவருந்தும் கூடம், சமையல் செய்ய தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய கல்லூரி விடுதி கட்டி நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த 2022ல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.
அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் பயன்பாட்டிற்க்காக முன்னாள் அமைச்சர் கே.பி.அன் பழகன் குத்துவிளக்கு கல்லூரி விடுதியை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பங்காரு, ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி.ரங்கநாதன், கூட்டுறவு சங்க தலைவர்கள். வீரமணி, கவுன்சிலர் விமலன், புதுர் சுப்ரமணி, ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.