fbpx
Homeபிற செய்திகள்கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலய தேர்த்திருவிழா

கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலய தேர்த்திருவிழா

கோவை ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலயத்தின் 61 வது ஆண்டு தேர்த்திரு விழா, விமரிசையாக நடை பெற்றது.

கோவை,ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. ஆர்.எஸ்.புரம்,ஜி.சி. டி.,சாய்பாபாகாலனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நூற்றுக் கணக்கான கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குடும்பங்கள் இந்த ஆலய பங்கின் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஆலயத்தின் 61 வது ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த ஜன. 28 ஞாயிறு அன்று அருட்பணி அருண் ஞானப்பிரகாசம் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

பிப்.2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாட்களும் தின மும் மாலையில் திருவிழா சிறப்பு நவநாள் வழிபாடுகள் நடந்தன. அருட்பணியாளர்கள் ஆன்ரு, ஜானி சகாயராஜ்,சிஜு ஆகியோர் தலைமையில் திருப்பலி, தொடர்ந்து மறையுரை, நவநாள் வழிபாடு மற்றும் திவ்ய நற்க ருணை ஆராதனை நடந்தது. இந்த நிகழ்வுகளில், ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

திருவிழா நாளான கடந்த 4ம் தேதி (ஞாயிறு) காலையில், அருட்பணி ஜெரோம் தலைமையில், கூட்டுப்பாடற் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
அன்று மாலையில் அருட்பணியாளர்கள் இராயப்பன், ஆன்ரு, விக்டர் பால்ராஜ், ஹென்றி ஆண்டனி ஆகியோர் தலைமையில், தேர்த்திரு விழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியைத் தொடர்ந்து, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரத் தேரில் புனித அருளானந்தரின் சுரூபம் வைக்கப்பட்டு, ஆலயத்திற்கு அருகிலுள்ள வீதிகளில் பவனியாகக் கொண்டு வரப்பட்டது.

இந்த தேர்பவனியில், பங்கு மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இறுதியாக திவ்ய நற்கருணை ஆசிரு டன்விழா நிறைவுபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை புனித அருளானந்தர் ஆலய பங்குத்தந்தை ததேயுஸ் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை கிளாட்வின், பங்குக்குழு உறுப்பினர்கள் மற்றும் அன்பியப் பொறுப்பாளர்கள்,பல்வேறு சபைகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img