ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூர் ஊராட்சி, கக்கரம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 -லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் கட்டிடத்தையும், 5.50-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையையும் கே.சண்முகபுரம் ஊராட்சியில் 23.57 லட்சம் மதிப்பிட்டில் ஊராட்சி மன்ற கட்டிடத்தையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமை வகித்தார்.
மேலும் நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, கிரி சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் செல்வகுமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், ஓட் டப்பிடாரம் ஒன்றிய தலைவர் ரமேஷ், குறுக்குச்சாலை ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள், கே.சண்முகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதிபாஸ்கர், உதவி தலைவர் எம்.பாஸ்கர் உட்பட கட்சி நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.