fbpx
Homeபிற செய்திகள்முதல்வரின் தூதர்களாக சுய உதவிக்குழு பெண்கள் செயல்பட வேண்டும் - அமைச்சர் உதயநிதி பேச்சு

முதல்வரின் தூதர்களாக சுய உதவிக்குழு பெண்கள் செயல்பட வேண்டும் – அமைச்சர் உதயநிதி பேச்சு

அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே பரப்புரை செய்வதில் முதல்வரின் தூதர்களாக சுய உதவிக்குழு பெண்கள் செயல்பட வேண்டும். என்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு சோலார் பகுதியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த விழா வில் 12291 மகளிர் சுய உதவிக் குழு பயனாளிகளுக்கு ரூ.179.09 கோடி நிதியுதவி மற்றும் ரூ.136.06 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார்.

அவர் தனது உரையில் தெரிவித்ததாவது: இப்பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் முதலமைச்சரிடம் அனுமதி பெற்று விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
மறைந்த முதல்வர் கலைஞர் பெண்கள் சுய உதவிக் குழு திட்டத்தை தொடங்கி வைத்தார். சுய உதவிக்குழுக்களுக்கு இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ரூ.30000 கோடி கடன் இலக்கில், இதுவரை ரூ.25000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு முதல் வரியாக ரூ.6 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு மாநிலம் அளித்துள்ளது. வசூலிக்கப்பட்ட நிதியில் 29 பைசா மாநிலத்துக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது. இருந்த போதிலும், மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக பெண்களின் வளர்ச்சிக்காக மாநில அரசு நிறைய செய்துள்ளது. தற்போது, 17 லட்சம் குழந் தைகளுக்கு பள்ளிகளில் காலை உணவும், 1.16 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகையும், லட்சக்கணக்கான பெண் கள் உயர்கல்விக்காக மாதந்தோறும் புதுமை பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 ரூபாயும் பெறுகின்றனர்.

அரசுப் பேருந்தில் இலவசமாகப் பயணம் செய்வதன் மூலம் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 1000 ரூபாய் சேமிக்கிறார்கள். SHG பெண்கள் இல்லம் தேடி மருத்துவம் சுகாதார திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் நலனுக்காக அனைத்து மாவட்டங்களிலும் பூமாலை வளாகம் கட்டப்பட்டது. அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக இணையதளம் உரு வாக்கப்பட்டது. இன்றைய விழாவில், 3.20 கோடி ரூபாய் மதிப்பிலான 100 பேட்டரி வாகனங்கள் அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்ய உதவியாக வழங்கப்பட்டது.

6 சுய உதவிக்குழுக்களுக்கு அவர்களின் தொழிலை மேம்படுத்த ரூ.19.20 லட்சம் வங்கிக் கடனும் வழங்கப்பட்டது. இது கடன் அல்ல, முதல்வர் அவர்கள் மீது காட்டிய நம்பிக்கை. சுய உதவிக் குழுக்கள் இந்த திட்டங்களை திறம்பட பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சர்கள் எஸ்.முத்துசாமி, மகளிர் மேம்பாட்டு கழக மேளான் இயக்குனர் எஸ்.திவ்யதர்ஷினி, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், கலெக் டர் ராஜகோபால் சுங்கரா, எஸ்.பி.ஜவஹர், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணைமேயர் செல்வராஜ், கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், இளங்கோவன் மற்றும் டிஆர்ஓ சாந்த குமார் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img