fbpx
Homeபிற செய்திகள்டி-1 காவல் நிலையம் சார்பில் நேதாஜி நகரில் 31 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

டி-1 காவல் நிலையம் சார்பில் நேதாஜி நகரில் 31 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள நேதாஜி நகரில் 31 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியதின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

மூன்றாம் கண் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் காண காவல்துறைக்கு உதவுகிறது. இதன் மூலம் பல குற்றவாளிகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவை மாநகரில் மாநகர காவல் துறை கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள நேதாஜி நகர் எக்ஸ்டென்ஷனில் 31 கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் சரவணகுமார் தலைமையில் கண்காணிப்பு கேமரா பொருத்தியதின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

உதவி ஆணையாளர் கரிகால் பாரிசாலன் மேற்பார்வையில் பொறுப்பு ஆய்வாளர் வெற்றிச்செல்வி, டி 1 காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்த் ஆகியோர் நேதாஜி நகர் எக்ஸ்டென்ஷன் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இணைந்து கண்காணிப்பு கேமரா துவக்க நிகழ்ச்சியை நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img