fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில், மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்கள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைசெல்வன், சிவக் குமார், செல்லூர் கே.ராஜு, சேவூர் ராமச்சந்திரன், பரந்தாமன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையார் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலையில், நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின் குழுத் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“இன்றைய தினம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காலை முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது அனைத்துத்துறை அரசு அலுவ லர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிதாக தடுப்பணைகள் கட்டுதல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்காக ரூ.57 கோடி மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டுதல், திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், குழந்தைகள் சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவுக்கென புதிய

கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இக்கூட்டத்தில் கோரப்பட்டுள்ளது. இவைகள் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மூலம் திருப்பூர் மாவட்டத்திற்கு விரைவாக கிடைப்பதற்கு இக்குழு ஆய்வு செய்து திட்டங்கள் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img