கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் ஆங்கிலத்துறையும் சான்லாக்ஸ் பதிப்பகத்துடன் இணைந்து இலக்கிய மொழிபெயர்ப்பு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தினர்.
கல்லூரி முதல்வர் சித்ரா தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர்களாக, நேபாளத்தின் மக்கவால்பூர் கல்லூரிப் பேராசிரியர் லோக்ராஜ் சர்மா, காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனந்தகுமார் மற்றும் நாகமலை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறைவு விழாவில் புகழ்பெற்ற எழுத்தாளரும் மருத்துவத்துறை சார்ந்த மயக்க மருந்து நிபுணருமான பியூஷ் மணியம்பத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, இலக்கியங்களை மொழிபெயர்க்கும்போது கலாச்சாரத் தடைகள் மற்றும் பேச்சு வழக்குகளால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைப் பற்றி எடுத்துக்கூறி அவற்றைக் கடந்து வருவதற்கான வழிகளையும் சுவைபட எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் சுமார் ஐம்பது ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கருத்துக்களை வழங்கினர். பிற கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து இணைய வழியிலும் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.