தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் இயக்கு னரகத்தைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் ஜனவரி 26ம் நாள் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்டனர். இவர்கள் இதற்காக நடைபெற்ற முகாமில் 1 மாத காலம் கலந்து கொண்டு நடைபெற்ற போட்டிகளில் பங்குபெற்று அகில இந்திய அளவில் மூன்றாம் இடம் பிடித்தனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில அளவில் சமூக சேவைப்பணிகளில் சிறந்து விளங்கிய கோவை குரூப்&ற்கு விருது வழங்கப்பட்டது. இதனை குரூப் கமாண்டர் கர்னல் சிவராவ் பெற்றுக் கொண்டார். மேலும் 9வது முறையாக முதலமைச்சர் பேனர் கிடைத்தது.
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி. அந்தமான் இயக்குநரக அளவில் சிறந்த என்சிசி அணியாக 2(தமிழ்நாடு) விமானப்படை என்சிசி தேர்வு பெற்றது. இதற்கான கோப்பையை கமாண்டிங் அதிகாரி விங் கமாண்டர் பர்குணன் பெற்றுக் கொண்டார். இந்த அணியின் சார்பாககடந்த பயிற்சி ஆண்டில் மாணவர்கள் பல்வேறு மாநில, தேசிய மற்றும் சர்வதேச முகாம்கள் மற்றும் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை புரிந் தற்காக வழங்கப்பட்டது.
மேலும் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா முகாமில் பங்கு பெற்ற 5(தமிழ்நாடு) பெண்கள் பெட்டாலியன் மாணவி அம்ரித்மேல் தேசிய அளவில் பெஸ்ட் கேடட் பிரிவில் சிறந்த மாணவியாக தேர்வு பெற்று தங்கப்பதக்கம் வென்றார். தொடர்ந்து தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல சாதனை களைப் புரிந்து வரும் கோவை என்சிசி மாண வர்களையும் அதிகாரிகளையும் துணை இயக்குநரக இயக்குநர் கமோடோர் அதுல் குமார் ரஸ்தோகி பாராட்டினார்.