சாலைப்பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.
முகாமில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கௌதமன், பாரத், கண்ணன், தேவசேனன் உள்ளிட்ட 14 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.
முகாமில் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டு நர்கள், நடத்துநர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு உரிமம் எடுக்க வந்தவர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை மோட்டார் வாகன அலுவலர் அருணாச்சலம்,மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.