சோமர் செட் கிரீன்வேஸ் சென்னை & சிட்டாடைன்ஸ் OMR ஆதரவற்ற பாத்திமா குழந்தைகள் நல மையம் மற்றும் உதவும் உள்ளங்கள் பொது அறக்கட்டளை ஆகியவற்றுடன் அஸ்காட் கேர்ஸ் முயற்சியின் கீழ் ஆதரவற்ற இல்லம் மற்றும் முதியோர் இல்லம் கட்டுவதற்கான நிதியை வழங்கியுள்ளது.
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் மேம்பாட்டு மையங்கள் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை வழங்குகிறது. தி அஸ்காட் லிமிடெட் இந்தியாவின் வட்டார பொது மேலாளர் ரோகன் ராகென்தத், சோமர் செட் கிரீன்வேஸ் சென்னை பொது மேலாளர் மன்சூர் அகமது, சிட்டா டைன்ஸ் OMR சென்னை பொது மேலாளர் பிரசாந்த் ராஜ்குமார், ராணி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அன்னை பாத்திமா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் செயலாளர், உதவும் உள்ளங்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் நிறுவனர் சங்கர் மகாதேவா ஆகியோர் உடன் இருந்தனர்.
அஸ்காட் லிமிடெட் இந்தியாவின் பகுதி பொது மேலாளர் திரு. ரோகன் ராகென்தத் பேசுகையில், “எங்கள் வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் பொருளாதாரப் பகுதிகளில் நேர்மையான தாக்கத்தை ஏற்படுத்த ஆஸ்காட்டில் உள்ள நாங்கள் எப்பொழுதும் விரும்புகிறோம்“ என்றார்.
மேலும் இந்த முன் முயற்சியின் கீழ், சுமார் 23 பள்ளிகள் மற்றும் மேம்பாட்டு மையங்களுக்கு ஒரு லிட்டர் முதல் 2500 லிட்டர் வரையிலான திறன் கொண்ட இயற்கை நீர் டேங்கர்கள் வழங்கப்படும் என நிகழ்வில் தெரிவித்தனர்.