fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 414 மனுக்கள் பெறப்பட்டது

திருப்பூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 414 மனுக்கள் பெறப்பட்டது

மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலை மையில் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 414 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செல்வி, துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img