fbpx
Homeபிற செய்திகள்ஆண்களுக்கென்று பிரத்யேக பிளாட்டின நகைகள் அறிமுகம்

ஆண்களுக்கென்று பிரத்யேக பிளாட்டின நகைகள் அறிமுகம்

ஓயாத வேலைப் பளுவின் காரணமான ஆண்களுக்கு தங்களை சரியாக பார்த்துக் கொள்ள நேரம் இல்லை. அதோடு, இந்த கால டிரெண்டுக்கு ஏற்ற ஸ்டைலிஸ்ட் ஸ்டேட்மெண்ட் எதுவென்பதில் போதுமான புரிதலும் இல்லை.

ஆண்டின் விடுமுறை நாட்களாக இருந்தாலும் சரி, கார்ப்பரேட் நிகழ்வாக இருந்தாலும் சரி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சந்திப்பதாக இருந்தாலும் சரி, இந்தப் புதிய டிரெண்டிங் ஆண்களின் தோற்றத்தை மேம்படுத்தும்.

இந்த 2024 ஆண்களுக்கான நகை டிரெண்டினை மறு வறையரை செய்கிறது பிளாட்டினம். இது, நகைகளிலேயே நேர்த்தியானது. அதிநவீனத்தின் அடையாளமுமாகும். இது உங்களை உடனடியாக தனித்து நிற்கச் செய்து, உங்களுக்கான புது அழகினை தருகிறது.

மென் ஆஃப் பிளாட்டினத்தின் சமீபத்திய கலெக்‌ஷனான கழுத்து அணிகலன்கள், பிரேஸ்லட்கள் மற்றும் மோதிரங்கள் ஆகியவற்றில் பல்வேறு வகையான கலெக்‌ ஷன்களை வழங்குகிறது.

அவை ஆண்களின் நகைகளின் உலகளாவிய டிரெண்டுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 95% தூய்மையான மற்றும் அரிதான பிளாட்டினத்தில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதோடு, ஒவ்வொரு வடிவமைப்பையும் பலவிதமான ஆடைகளுடன் ஒத்துபோகும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img