fbpx
Homeபிற செய்திகள்தி சம்ஹிதா அகாடமி சூப்பர் மாம் போட்டி

தி சம்ஹிதா அகாடமி சூப்பர் மாம் போட்டி

கோவை மலுமிச்சம்பட்டி தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் “சூப்பர் மாம் 2023 -2024”ஆம் ஆண்டிற்கான போட்டி பல்வேறு நிலைகளாக நடத்தப்பட்டு, கடந்த 10ம் தேதி நிறைவு விழா நடந்தது.

பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் அம்மாக்களின் தனித் திறமைகளை வெளிக் கொணர்வதற்காக முதன் முதலாக இவ்வாண்டு நடத்தப்பட்டது.

பெற்றோர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வருவதுடன் மாணவர்களின் அனைத்து செயல்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்தி, தாங்களும் ஊக்கம் அடையும் நோக்கத்துடன் தி சம்ஹிதா அகாடமி பள்ளி நிர்வாகம் இப்போட்டியினை நடத்தியது.

இதில் 38 பெற்றோர்கள் கலந்து கொண்டு, அரை இறுதிக்கு எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மூன்று பேர் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அனைவரும் வெவ்வேறு நிலைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உற்சாக மூட்டுவதாக அமைந்தது. இறுதிப் போட்டியில் , தி சம்ஹிதா அகாடமியின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான சூப்பர் அம்மாவாக இ.சித்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் சி.எஸ்.தவசேனா மற்றும் சி.எஸ்.ஹரி ஹரசுதன் ஆகிய மாணவர்களின் பெற்றோர் ஆவார் எஸ்அன்னபூரணி இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இவர் பாரி சின்னசாமி மற்றும் தமிழினி ஆகியோரின் பெற்றோர் ஆவார். ரேகா முருகேசன் இரண்டாம் இடத்தை பிடித்தார். இவர் எம்.ரேயாரொசாரியோவின் பெற்றோர் ஆவார்.

பள்ளி முதல்வர் புஷ்பஜாகண்ணதாசன் முதலிடத்தை பிடித்த இ.சித்ரா கிரீடம் அணிவித்தும், இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img