கோவை ஆகாஷ் பைஜூஸ் ஜெ .இ.இ. தேர்வு பயிற்சி மையத்தை சேர்ந்த 8 மாணவர்கள் ஜேஇஇ மெயின்ஸ் 2024-ன் முதல் அமர்வில் 97 சதவிகிதம் மற்றும் அதற் கும் மேல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்து உள்ளனர்.
இதுகுறித்து ஆகாஷ் பைஜூஸ் மண்டல இயக்குனர் தீரஜ் மிஸ்ரா கூறிய தாவது:- ஆகாஷ் பைஜூஸ் மையம் 2024 ஆம் ஆண்டுக்கான கூட்டு நுழைவுத் தேர்வின் முதல் அமர்வில் 97 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்ற கோவையை சேர்ந்த எட்டு மாணவர்களின் குறிப்பிடத்தக்க சாதனையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
சாதனையாளர்கள் ஸ்ரீராம் மஹாலக்ஷ்மி ஆனந்த் இயற்பியலில் 100க்கு 100 சதவிகிதத் துடன் 99.96 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளார், ஹரிச்சரண் எம் 99.65 சதவிகிதமும், அபிமன்யு சௌத்ரி கே 99.26 சதவிகிதமும், சஞ்சய் கண்ணா எச் டி 99.14 சதவிகிதமும், மதுஷ்யாம் எம் 98.77 சதவிகிதமும், சபரி கிருஷ்ணா ஆர் 98.34 சதவிகிதமும், நிஷா சைபுல்லா 98.15 சதவிகிதம் மற்றும் எஸ்.அபிஷேக் 97.85 சத விகித மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இந்தியாவின் மிக கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றான ஜேஇஇ-ல் மாணவர்களின் சிறந்த மதிப்பெண்கள் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் கல்வித் திறனை வெளிப்படுத்துகிறது.
தேசிய தேர்வு முகமை இன்று, இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள இரண்டு பொறியியல் கூட்டு நுழைவுத் தேர்வுகளில் முதல் தேர்வு முடி வுகளை வெளியிட்டது. உலகளவில் மிகவும் சவாலான நுழைவுத் தேர்வான புகழ்பெற்ற ஐஐடி ஜேஇஇ- யில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஆகாஷின் வகுப்பறைத் திட்டத்தில் பதிவுசெய்த மாணவர்கள், அடிப்படைக் கருத்துகளைப் புரிந்துகொண்டு சரியான படிப்பு முறையை அர்ப்பணிப்புடன் பின்பற்றி சிறந்த மதிப் பெண்களைப் பெற்றுள்ளனர். மேற்கண்டவாறு அவர் கூறினார். முன்னதாக தேர்ச்சி பெற்ற 8 மாணவர் கள் ஆகாஷ் பைஜூஸ் பயிற்சி மையத்திற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.