fbpx
Homeபிற செய்திகள்புத்தகங்கள் நன்கொடை வழங்கிய நந்தா கல்வி நிறுவனங்கள்

புத்தகங்கள் நன்கொடை வழங்கிய நந்தா கல்வி நிறுவனங்கள்

நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் 5 அரசுப் பள்ளிகளின் நூலகங்களுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான 3500 புத்தகங்கள் அலமாரிகள் இலவசமாக வழங்கப்பட்டன. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் வாழ்த்தி பேசினார். பெருந்துறை, லக்காபுரம், செம்புலிச்சம்பாளையம், திருவாச்சி, பொலவகாளிபாளையம் ஆகிய அரசுப் பள்ளிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா வழங்கினார். புத்தகங்கள் மற்றும் அலமாரிகள் ஏற்றிய வாகனத்தையும் அவர் கொடியசைத்து அனுப்பிவைத்தார். அறக்கட்டளை செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி, பேராசிரியர்கள் பங்கேற்றனார்.

படிக்க வேண்டும்

spot_img