சுரண்டையில் இரட்டை குளம் கால்வாய் திட்டத்தினை நிறைவேற்ற கோரி விவசாயிகள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டத் தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது இந்நி லையில் பல ஆண்டுகளாக சுரண்டை, ஊத்துமலை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவ சாயத்திற்கு தண்ணீரின்றி விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
இந்நி லையில் சுரண்டை- முதல் ஊத்துமலை பெரியகுளம் வரை இரட்டை குளம் கால்வாய் திட்டத்தினை நிறைவேற்ற கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தினர் மற்றும் 20 கிராம விவ சாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் 20 கிராம் மக்களின் வாழ் வாதாரம் பாதுகாக்கப்படும், நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
பல்வேறு விவசாய சங்கங்கள் சுமார் 50 ஆண்டு காலமாக போராடிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அரசு கோரிக்கை தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
வானம் பார்த்த பூமியாக உள்ள தங்கள் பகுதி விளை நிலங்களையும், விவசாயிகளின் வாழ் வாதாரத்தையும் மீட்டு எடுப்பதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும். கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக விவசாயிகள் ஒன்று திரண்டு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் அலுவலகத்தை முற்று கையிட போவதாக தெரிவித்ததால் தென்காசி நகர் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது குறிப்பிடத் தக்கது.