ஸ்மார்ட் மற்றும் நிலையான இயக்கத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான அல்ஸ்டாம், ஸ்ரீ சிட்டியில் உள்ள அதன் அதிநவீன உற் பத்தி நிலையத்தில் சென்னை மெட்ரோ IIஆம் கட்டத்திற்கான உலகத் தரம் வாய்ந்த மெட்ரோ பொலிஸ் ரயில் பெட்டிகளின் உற்பத்தி தொடங்கியது.
இந்த ஆர்டர் 36 மெட்ரோ ரயில் பெட்டிகளை வழங்கு வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் மூன்று கார்கள் மற்றும் 80 கிமீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. இந்த ரயில்கள் 26 கிமீ கோரிடாரில் இயங்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. இது 28 நிலையங்கள் (18 உயர்த்தப்பட்ட மற்றும் 10 நிலத்தடி) வழியாக பூந்தமல்லி புறவழிச்சாலை யையும் லைட் அவுஸை யும் இணைக்கும் II-ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மற்றும் அல்ஸ்டாம் இந்தியா ஆகியவற்றின் தலைவர்கள் தலைமையில் ஒரு நினைவுக்குரிய விழாவில் உற்பத்தி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மதிப்பு 124 மில்லியன் யூரோக்கள் ஆகும்.
அல்ஸ்டாமின் மெட்ரோபொலிஸ் மெட்ரோக்கள் நகரின் 11 மில்லியனுக்கும் அதிகமான குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணிகள் போக்குவரத்தை உறுதி செய்யும் என சிஎம்ஆர்எல் நிர்வாக இயக்குநர் எம். ஏ.சித்திக் ஐ.ஏ.எஸ் கூறினார்.
2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தத் தொழில் நுட்ப ரீதியாக மேம்பட்ட ரயில்களை மிமி-ஆம் கட்டம் நெட்வொர்க்கில் இயக்க எதிர்பார்க்கிறோம் என அல்ஸ்டாம் இந்தியாவின் நிர்வாக இயக் குனர் ஒலிவியர் லோய்சன் கூறினார்.
சென்னை மெட்ரோ II-ஆம் கட்டத்திற்கான ரயில்களின் ரோலிங் ஸ்டாக் சிறப்பம்சங்கள் மெட்ரோ அமைப்பு 1000 பயணிகள் வரை இட மளிக்கக்கூடிய மூன்று கார் ரயில்கள் உட்பட ஈர்க் கக்கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த டிரைவர் இல்லாத ரயில்கள் மேம்படுத்தப்பட்ட பயணிகளுக்கான அறிவிப்பு அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளன.
சரியான நேரத்தில் புதுப்பிப்புகள் மற்றும் பயணம் முழுவதும் தகவல் பரவலை உறுதி செய்கின்றன. வசதி, பாது காப்பு, மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி நகர்ப்புற போக்குவரத்தை மறுவரையறை செய்ய புதிய மெட்ரோ அமைக்கப் பட்டுள்ளது.