தமிழகத்திலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இதுவரை 11 உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
அந்த வகையில் 12வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு புகழ்மிக்க பிரபல எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவன தமிழ்ப் பேராயத்தின் சார்பில் உலக மொழிகளில் தமிழின் தாக்கம் என்னும் தலைப்பில் மே 2025ம் ஆண்டு நடைபெற உள்ளதை சென்னையில் நடைபெற்ற பத்திரிக் கையாளர்கள் கூட்டத்தில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் எஸ்.ஆர்.எம் நிறுவன வேந்தர் பாரிவேந்தர் அறிவித்தார்.
இம்மாநாட்டுக்கான முதல் ஆலோசனைகள் கூட்டம் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவன வளாகத்தில் எஸ்.ஆர்.எம் நிறுவன பதிவாளர் முனைவர் பொன்னுசாமி தலைமையில் சமீபத்தில் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களை தமிழ்ப் பேராயத்தலைவர் முனைவர் நாகராசன் வரவேற்றுப் பேசினார். இரண்டு அமைப்புகளுக்குமுள்ள பொறுப்புகளைப் பற்றி வளாக நிர்வாகி இரா. அருணாச்சலம் விளக்கிக் கூறினார்.