தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் நடத்திய 20வது மாநில சிலம்பம் சாம்பியன்ஷிப் 2023-2024 போட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் சி.எஸ்.ஐ அரங்கில் பிப்ரவரி 16 முதல் 18 வரை நடைபெற்றது.
இப்போட்டியினை உலக சிலம்ப சம்மேளனம் நிறுவனர் பேராசான் செல்வராஜ் துவக்கி வைத்தார். இதில் சிலம்பாலயா மற்றும் இம்மார்டல் ஸ்போட்ஸ் அகாடமி மாணவ மாணவியர்கள் 34 பேர் கலந்து கொண்டு 12 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண் கலம் என மொத்தம் 34 பதக்கங்கள் வென்றனர்.
மினி சப் ஜுனியர் பெண்கள் பிரிவில் 1.நேகா ஸ்ரீ குத்துவரிசையில் தங் கம், கம்பு சண்டையில் வெண்கலம். 2. ஹன்சிகா அலங்காரவீச்சு தங்கம். 3. ஜாக்குலின் பீட்டர் இரட்டை கம்புவீச்சு தங் கம். 4. தன்யஸ்ரீ ஒற்றை வாள்வீச்சு வெண்கலம். 5. எம்.ஹரிணி கம்பு சண்டை யில் வெண்கலம்.
மினி சப் ஜுனியர் ஆண்கள் பிரிவில் 6. ரக்க்ஷன் மான்கொம்பில் தங்கம். 7. பிரனேஷ் இரட்டை சுருள் வாள் வீச்சில் தங்கம், கம்பு சண் டையில் வெள்ளி. 8. ஷஸ்வந்த் அலங்காரவீச்சு தங்கம், கம்பு சண்டையில் வெள்ளி. 9. நிஷ்வந்த் குத்து வரிசையில் வெண்கலம். 10. பிரேம்சாய் ஆயுத ஜோடியில் வெள்ளி. 11. யுவதர்சன் ஆயுதஜோடியில் வெள்ளி. 12. அம்ரிஷ் கம்புசண்டையில் வெள்ளி. 13. ஜோ அர்னவ் கம்பு சண்டையில் தங்கம். 14. பிரணீத் ஸ்கந்தா கம்பு சண்டையில் தங்கம்.
சப் ஜுனியர் பெண்கள் பிரிவில் 15. நேத்ரா ஸ்ரீ இரட்டை வாளில் தங்கம். 16. இனியா கம்புவீச்சில் வெண்கலம். 17. சரித்திரா ஒற்றை வாள்வீச்சில் வெள்ளி. 18. ஹரிணி ஆயுத ஜோடியில் வெண்கலம். 19. சார்விகா ஆயுதஜோடியில் வெண்கலம். 20. அஞ்சனா கம்பு சண்டையில் வெண்கலம். 21. கார்னிகா ஒற்றை சுருள் வாள்வீச்சில் வெண்கலம்.
சப்ஜுனியர் ஆண்கள் பிரிவில் 22. ஹரிசுந்தர் அலங்கார வீச்சில் வெண் கலம். 23. சரண் வேல் கம்புவீச்சில் வெள்ளி, கம்புசண்டையில் வெண்கலம். 24. ராகுல் இரட்டை சுருள் வாள் வீச்சில் தங்கம். 25. ஹிரி திக் கிக்ஷன் இரட்டை கம்புவீச்சில் வெண்கலம், கம்பு சண்டையில் வெண் கலம். 26. சஞ்ஜித் ஒற்றை சுருள்வாள் வீச்சில் வெள்ளி, 27. நௌனீத் கம்பு சண்டையில் வெள்ளி.
ஜுனியர் ஆண்கள் பிரிவில் 28. தரணிதரன் அலங்காரவீச்சில் தங்கம். 29. பிரணவ் கம்பு சண்டையில் தங்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாண வர்களை சிலம்பாலயா தலைமை ஆசிரியர் செல் வக்குமார், பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார், அருண்பாண்டியன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் வாழ்த் தினர்.