தென் மாநிலங்களில் வருவாயை அதிகப்படுத் தும் விதமாக பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா தனது கிளைகளை அதிகப்படுத்தி வருகிறது. கோவையில் இன்று (19ம் தேதி) ஒரே நாளில் 3 கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கோவை மண்டலத்தில் தனது 31 வது கிளையாக பேங்க் ஆப் மகாராஷ்டிரா, தனது நடுத்தர பெரு நிறுவன (மிட் கார்ப்பரேட்) கிளையை கோவை ஆர்.எஸ்.புரம் கிழக்கு சர் சண்முகம் சாலை வாரி டவர்ஸ்-ல் துவக்கியது.
இந்த கிளையை மண்டல மேலாளர் ஷிபு ஜேக்கப் தலைமையில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மனித வள மேம்பாட்டு துறையின் பொது மேலாளர் கே.ரா ஜேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள் மற்றும் பெரும் வணிக வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த கிளை துவங்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், கோவை மண்டலத்தில் 2000 கோடி ரூபாய் அளவில் வணிகம் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.
இது ஐயாயிரம் கோடி ரூபாயாக உயரும் என நம்பிக்கை தெரிவித்த அவர், அனைவரும் இந்த புதிய கிளையின் சேவை யைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் கடன், லாக்கர் சேவை, என்.ஆர்.ஐ. சேவைகள் என வங்கி தொடர்பான அனைத்துச் சேவைகளையும் விரைந்து தரும் வகையில் தங்களது வங்கி ஊழியர்கள் செயல்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
அதேபோல கோவை வடவள்ளி திருவள்ளுவர் நகர் ஜெயம் காம்ப்ளக்சில் (இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிரில்) பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியின் 32வது கிளை மற்றும் 33வது கிளையாக வீட்டு வசதிக் கடன் கிளை திறப்பு விழாவும் இன்று நடைபெற்றது.
இந்த கிளைகளை வங்கியின் மண்டல மேலாளர் ஷிபு ஜேக்கப் தலைமையில் பொது மேலாளர் கே.ராஜேஷ் குமார் திறந்து வைத்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் வி.கீதாலட்சுமி முன்னிலை வகித்து குத்து விளக்கேற்றினார்.
மேற்கண்ட பேங்க் ஆஃப் மகராஷ்டிரா வங்கி கிளைகள் திறப்பு விழாக்களில் திரளான வாடிக்கையாளர்கள், வங்கி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.