சென்னை காமிக் கான் 2024ன் முதல் பதிப்பு நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டின் சிறந்த வார இறுதியை சென்னை ரசிகர்கள் அனுபவித்தனர்
மாருதி சுசுகி அரேனா சென்னை காமிக்கான் நிகழ்ச்சியை கிரஞ்சிரோல் வழங்கியது. இது கடந்த 17 மற்றும் 18ம் தேதியில் சென்னை வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடந்தது. காமிக் புத்தகங்கள், மங்கா, அனிமே, சூப்பர் ஹீரோ படங்கள் மற்றும் அனைத்து பொழுதுபோக்கு விஷயங்களையும் ஒன்றிணைத்து, பாப் கலாசார கொண்டாட்டத்தின் முதல் பதிப்பு, ரசிகர்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றியடைந்தது.
பங்கேற்பாளர்கள் தங்கள் உள்ளார்ந்த ஆர்வத்தை காஸ்பிளேக்கு மாற்றினர் மற்றும் அவர்களின் வேடங்களைக் காட்சிக்கு வைத்தனர், சிலர் காஸ்பிளேயர்களுடன் உரையாடினர் மற்றும் சிலர் போட்டிகள், விளையாட்டுகள் என பிற உற்சாகமான செயல்பாடுகளில் பங்கேற்றனர்.
அதே நேரத்தில் ஒரு சிலர் பேட்மேன், லோகி, ஜோக்கர் போன்ற புகழ்பெற்ற கதாபாத்திரங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தனர். மேலும் பலவித ஸ்பைடர் மேன்களும் இருந்தனர். சுமார் 3000 காஸ்பிளேயர்களுடன் இந்த இரண்டு நாட்களில் நம்ப முடியாத 32000-க்கும் மேலான ரசிகர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை காமிக் கானின் வெற்றி குறித்து, காமிக் கான் இந்தியாவின் நிறுவனர் ஜதின் வர்மா மகிழ்ச்சி தெரிவித்தார்.
தொடர்ந்து நகைச்சுவை கலைஞர் அபிஷேக் குமார், ஆர்ட் கை ராப் ஆகியோர் தங்களின் அனுபவங்களை தெரிவித்தனர். இதனையடுத்து மும்பை காமிக் கான் வரும் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.