மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்கதாசம்பாளையம் ஊராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட சேரன் நகர் 2வது பாலம் முதல் பாயப்பனுர் சாலை வரை ரூபாய் 1.70 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி முடிந்த போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆ.ராசாவிடம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி சேரன் நகர் பகுதியில் இருபது நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாகவும் ஊராட்சி சார்பில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என தெரிவித்து ஆ.ராசாவிடம் புகார் மனு அளித்தனர்.
மேலும் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வினோத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிடம் மனு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் நகர மன்றத்தலைவர் மெஹரிபாபர்வீன், துணைத்தலைவர் அருள்வடிவு, நகராட்சி ஆணையாளர் அமுதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அஷ்ரப்அலி, டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், சுரேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.அருண்குமார்,நகர செயலாளர்கள் முகமதுயூனுஸ், முனுசாமி, ரமேஷ், உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.