fbpx
Homeபிற செய்திகள்தேனியில் 8 நாள் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

தேனியில் 8 நாள் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

தேனி மாவட்டம், பழனிசெட்டி பட்டி பேரூராட்சிக்குட்பட்ட மேனகா மில் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் இரண்டாவது புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி முன்னிலையில் நேற்று (3ம் தேதி) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகளை பார்வையிட்டார்.

புத்தகம் வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவும், அந்த காலம் முதல் இந்த காலம் வரை உள்ள பல்வேறு வகையான நூல்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பதற்காக புத்தகத் திருவிழா நடத்தப் படுகிறது. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் இரண்டாவது புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. 10ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட் சித்தலைவர் பேசியதாவது: பொது மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும் மேலும் குறிப்பாக மாணவர்களிடையே புத்த கத்தை நண்பர்களாக கருதக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இப்புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த புத்தகத் திருவிழாவில் காலை 10.30 முதல் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெறவுள் ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறு வோர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. சிறுகுழந்தைகளின் பொழுது போக்கிற்காக தனியாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தகத்திருவிழா நடைபெற உள்ள எட்டு நாட்களும் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் பட்டிமன்றங்கள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. முதல் நாளான இன்று விஜய் தொலைக்காட்சி பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா பேசினார்.

இவ்விழாவில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், தேனி- அல்லிநகரம் நக ராட்சி நகர்மன்றத்தலைவர் பா.ரேணுபிரியா, மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவர் ராஜபாண்டியன், பழனி செட்டிபட்டி பேரூராட் சித்தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, மாவட்ட ஆட் சியரின் நேர்முக உதவியாளர் சிந்து, வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துமாதன் (பெரியகுளம்), தாட்சாயினி (உத்தமபாளையம்) மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img