கோவை கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் ஆண்டு விழா ‘விருட்சம் 2024’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டது.
கேபிஆர் குழுமங்களின் தலைவர் ராமசாமி மற்றும் சிறப்பு விருந்தினர் ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் இயக்குனர் முனைவர் கவிதாசன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். கல்லூரியின் முதல்வர் சரவணன் 2023 – 2024 ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார்.
தொடர்ந்து, கல்லூரியின் தலைவர் கே பி ராமசாமி பேசுகையில்,
“மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்கள், துறை சார்ந்த திறன்களை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். இங்கு பயிலும் மாணவர்கள் நாட்டின் உள்ள அனைத்து துறைகளிலும் முக்கிய பதவிகளுக்கு வர வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் கவிதாசன் மாணவர்கள் மற்றும் தனி நபர்கள் வாழ்வில் உயர கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை குறிப்பிட்டு பேசினார்.
பின்னர் விருதுகள் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.