fbpx
Homeபிற செய்திகள்புளி வணிகர்கள் நலச்சங்க 25-ம் ஆண்டு வெள்ளி விழா

புளி வணிகர்கள் நலச்சங்க 25-ம் ஆண்டு வெள்ளி விழா

தர்மபுரி மாவட்ட புளி வணிகர்கள் நலச்சங்க 25-ம் ஆண்டு வெள்ளி விழா தர்மபுரி கோட்டையில் உள்ள டி.என்.வி. ராஜ் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தின் நிறுவன தலைவர் பி.பாஸ்கர் தலைமை தாங்கினார்.

சங்கத் துணைத் தலைவர் பாலக்கோடு அன்வர் பாஷா வரவேற்று பேசினார். விழாவில் புளி வணிகர்களின் தந்தை என்று அழைக்கப்படும் முன்னாள் எம்.எல்.ஏ. டி.என்.வடிவேல் கவுண்டர் உருவப்படத்திற்கு நிர் வாகிகள் மற்றும் முக்கிய பிர முகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

சங்க மாவட்ட செயலாளர் டி.என்.வி. வினுபாஜ்ராஜ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். பாப்பாரப்பட்டி பகுதி தலைவர் வள்ளி சின்னசாமி, பென்னாகரம் பகுதி தலைவர் சுப்பிரமணி உள் ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சங்க நிறுவனத் தலைவர் பி.பாஸ்கர் பேசுகையில், தர்மபுரி மாவட்ட புளி வணிகர்கள் நலச் சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் வெள்ளி விழா கொண்டாடப் படும் இந்த நாள் வரை சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், இனிவரும் காலங்களில் சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். மற்ற மாவட்டங்களில் ஒரு பிரச்சனை என்றால் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருங்கிணைந்து அந்த பிரச்சனைக்கு தீர்வு காணுகிறார்கள்.

மற்ற மாவட்டங்களை போன்று அரசியலுக்கு அப்பாற்பட்டு தர்மபுரி மாவட்டம் வளர்ச்சி அடைவதற்கு அனைத்துக் கட்சி பிரமுகர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தர்மபுரி மாவட்டம் தொழில்துறையில் முன்னேறுவதற்கு முழு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.

விழாவில் பா.ம.க. கௌரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்பு செயலாள ரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. சிங்காரம், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், அ..ம.மு.க. மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஏ. பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறு துணையாக இருப்போம் என்று பேசினார்கள்.

விழாவில் தமிழ்நாடு மெர் கண்டைல் வங்கி மண்டல மேலாளர் குமரேசன், முதன்மை மேலாளர் சுபாகரன் ஆகியோர் புளி வணிகர்களுக்கு வங்கியின் சார்பில் அளிக்கப்படும் திட்டங் கள் குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து வங்கியின் சார்பில் புளி வணிகர்களுக்கு ரூ.50 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் புதிய புளி உற்பத்திக்கு பூஜை போட்டு பணிகளை தொடங்குவது, புளி கட்டு கட்டும் பாய் மற்றும் கயிருக்கு ஒரு கிலோ பெற்று தந்த நிறுவனத் தலைவர் பி.பாஸ்கர் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது, தற் போது நிலவிவரும் வரட்சி காரணமாக புளி கட்டு கட்டும் பாய் கிடைக்காத காரணத்தால், விருப்பமுள்ள வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளில் புளி கட்டு தற்காலிகமாக கட்டிக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.

இந்த விழாவில் ஏராளமான புளி வணிகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி பகுதி தலைவர் டி.கே.பாபு நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img