fbpx
Homeபிற செய்திகள்தனலக்ஷ்மி வங்கியில் ஜிஎஸ்டி வரியை எளிதாகச் செலுத்தும் சேவை அறிமுகம் பொதுமேலாளர் ஜான் வர்கீஸ் தகவல்

தனலக்ஷ்மி வங்கியில் ஜிஎஸ்டி வரியை எளிதாகச் செலுத்தும் சேவை அறிமுகம் பொதுமேலாளர் ஜான் வர்கீஸ் தகவல்

தனலக்ஷ்மி வங்கியின் பொதுமேலாளர் ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
தனலக்ஷ்மி வங்கி, அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மற்றும் வசதியான வரி செலுத்தும் அனுபவத்தை வழங்கும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தும் சேவைகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறது.


சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் (ஜிஎஸ்டிஎன்) போர்ட்டலுடனான இந்த ஒருங்கிணைப்பு, வரி இணக்கத்தை நெறிப்படுத்துதல், வசதியை மேம்படுத்துதல் வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதற்கான சிரமமில்லாத வழிமுறைகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.


ஜிஎஸ்டி செலுத்துவதற்கு பல்வேறு வசதிகளை வழங்குவதில் வங்கி மகிழ்ச்சியடைகிறது. எங்கள் பாதுகாப்பான நெட் பேங்கிங் தளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை ஆன்லைனில் வசதியாகச் செலுத்தலாம்.
தனிநபர் பரிவர்த்தனைகளை விரும்புவோருக்கு, எங்கள் கிளைகளின் கவுண்டரில் ஜிஎஸ்டி வரியை ஏற்கும் வசதிகள் உள்ளன.


எங்கள் 261 கிளைகள், 14 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களின் ஜிஎஸ்டி கட்டணங்களை எந்த சிரமமுமின்றி செலுத்தலாம்.
நேரடி மற்றும் மறைமுக வரிகளை வசூலிக்க இந்திய ரிசர்வ் வங்கியால் தனலட்சுமி வங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, வங்கி ஏற்கனவே ICEGATE போர்ட்டலுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை இணைய வங்கி தளம் மூலம் சுங்க வரி செலுத்தும் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.


தனலக்ஷ்மி வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவன் ஜே.கே, இந்த சேவையை அறிமுகப்படுத்தி, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதி பரிவர்த்தனைகளை எளிமையாக்கி உள்ளார். ஜிஎஸ்டி கட்டணச் சேவைகளின் அறிமுகம் செய்து வங்கி சேவையை மேம்படுத்தி இருப்பது எங்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
இவ்வாறு தனலக்ஷ்மி வங்கியின் பொதுமேலாளர் ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img