fbpx
Homeபிற செய்திகள்தேசிய அளவிலான போட்டியில் வென்ற தமிழ்நாடு அணிக்கு உற்சாக வரவேற்பு

தேசிய அளவிலான போட்டியில் வென்ற தமிழ்நாடு அணிக்கு உற்சாக வரவேற்பு

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான நாக் அவுட் கராத்தே போட்டியில் ,வேர்ல்ட் புனாக்கோசி கராத்தே தமிழ்நாடு அணி பங்கு பெற்றது .

இதில் சப் ஜூனியர் பிரிவில் அஸ்லம், ஆகாஷ், அனீஸ் கோப்பைகளை வென்றனர். ஜூனியர் பிரிவில் ஜோஸ்வா, சித்தார்த், ஆகியோர் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பெற்றனர். சீனியர் பிரிவில் கவினேஷ், திருப்பதி இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை பெற்றனர்.
50 கிலோ முதல் 55 கிலோ வரையிலான பிரிவில், இளங்கோ, அனீஸ் அசைன் ஆகியோர் கோப்பைகளை வென்றனர்.

ஹெவி வெயிட் பிரிவில் தல்கா, சம்சுதீன் ஆகியோர் முதல் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
இந்நிலையில் கேரளாவில் இருந்து ஈரோடு ரயில்வே ஜங்ஷன் வழியாக பள்ளிபாளையம் வந்த வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு வழங்கும் நிகழ்வு பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதி அருகே நடைபெற்றது .

இந்த நிகழ்வில் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து வீரர் வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது .அதன் பிறகு சாதனை படைத்த வீராங்கனைகள் ஊர்வலமாக பரிசு கோப்பைகளுடன் நடந்து சென்றனர்.

இதில் பள்ளிபாளையம் திமுக நகர செயலாளர் குமார், நகர அவை தலைவர் குலோப்ஜான் ,நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், இந்திய தலைமை பயிற்சியாளர் ஹசைன் இஸ்மாயில், தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் முகமது யஹ்கா ஆகிய பயிற்சியாளர்களும், மாவட்ட பயிற்சியாளர்களும் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்று, வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர் .

மேலும் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் வேர்ல்ட் கராத்தே போட்டியில், இந்திய அணியில் இவர்கள் பங்கு பெற உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img