fbpx
Homeபிற செய்திகள்மலக்குடல் புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை சாதனை

மலக்குடல் புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை சாதனை

கோவையில் உள்ள அமெரிக்கன் ஆன்காலஜி நிறுவனம்(AOI) மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 57 வயது பெண்மணிக்கு Neoadjuvant கதிர்வீச்சு சிகிச்சை வெற்றிகரமாக அளித்து சாதனை படைத்துள்ளது.
இந்தக் கதிர்வீச்சு சிகிச்சை வேரியன் நிறுவனத்தின் Truebeam STX என்னும் அதி நவீன LINAC கருவியைப் பயன்படுத்தி அளிக்கப்பட்டது. புற்றுநோயியல் கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர்கள் ஐந்து வாரங்களில், வாரத்துக்கு ஐந்து நாட்கள் இந்த சிகிச்சையை தொடர்ந்து வழங்கினர். கதிர் வீச்சு சிகிச்சையுடன் கூடுதலாக கீமோதெரபி மாத்திரைகளும் நோயாளிக்கு வழங்கப்பட்டது.

இந்தக் கதிர்வீச்சு சிகிச்சை IMRT எனப்படும் நவீன கதிர்வீச்சு முறையைப்பயன்படுத்தி அளிக் கப்பட்டது. இதன் காரணமாக புற்றுநோய் கட்டியை சுற்றியுள்ள புற்றுநோய் பாதிப்பு இல்லாத உறுப்புகள் முழுமையாக கதிர் வீச்சின் பாதிப்பு இல்லாமல் பாதுகாக்கப்பட்டது. இது போன்ற நவீன கதிர்வீச்சு சிகிச்சை முறைகள், நோயை குணப்படுத்துவது கதிர்வீச்சு சிகிச்சையின் பக்கவிளைவு களையும் பெருமளவு குறைக்க உதவுகிறது.
57 வயது பெண்ணுக்கு மலத்தில் ரத்தம் கலந்து வெளியேறும் தொந்தரவுடன் சிகிச்சைக்கு வந்தார். அவரை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு மூன்றாம்நிலை (Stage -III ) மலக்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறிப்பட்டது.

இந்த நோயாளிக்கு வழங்கப்பட வேண்டிய சிகிச்சை முறை குறித்து பல மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள்ளும் Tumorboard கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இவருக்கு முதலில் கதிர்வீச்சு சிகிச்சையும் பின்னர் 8 வாரங்கள் கழித்துநோயின் தன்மையை மதிப்பிட்டு அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் நோயாளிக்கு கதிர்வீச்சுசிகிச்சை எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் அளிக்கப்பட்டது. கதிர்வீச்சு சிகிச்சைக்கு பின் மலத்தில் ரத்தம் கலந்து போகு தல் தொந்தரவு முழுமையாக சரிசெய்யப்பட்டு குணமடைந் தது நலம்பெற்றார்.

கோவை அமெரிக்கன் ஆன்காலஜி நிறுவனம் (AOI) புற்றுநோயியல் கதிர்வீச்சுநிபுணர் மருத்துவர் சி.அன்பு, இந்த சிகிச்சை அணுகு முறையின் முக்கியத்துவம் குறித்து உரை யாற்றினார். அப்போது பேசிய அவர் Neoadjuvant கதிர்வீச்சு சிகிச்சையானது புற்றுநோயிலிருந்து நிரந்தர குணம் அடைவதற்கும், நிரந்தர குளோஸ்டமியின் (புதிய ஆசனவாய்) தேவையை குறைப்பதற்கும் கருவியாக உள் ளது என்றும் இந்த முறை புற்றுநோய் கட்டியை சுருக்குவது மட்டுமல்லாமல், சிகிச்சை வெற்றி அடையஉதவுகிறது என் றும் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை முறை யின் மூலம் இந்த நோய் முழுமையாக அகற்றப்பட்டு நோயாளி முழுமையாக குணம் அடைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்றும் மலக்குடல் புற்றுநோயின் அறிகுறிகளில் குடல் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் (வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்றவை), மலத்தில் ரத்தம், பலவீனம் அல்லது சோர்வு, எதிர்பாராத உடல் எடை இழப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகள் ஆகும் என்றும் மேலும் தெரிவித்தார்.

கோவையில் உள்ள அமெரிக்கன் ஆன்காலஜி நிறுவனத்தின் மண்டல இயக்குனர் கிருஷ்ணதாஸ் கூறுகையில், கோயம்புத்தூரில் உள்ள அமெரிக்கன் ஆன் காலஜி நிறுவனம்(AOI) தனியார் மயமாக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையமாக இருந்தாலும் எங்களது சேவை அர்ப்பணிப்பு உறுதியானது என்றும் நோயாளியின் நல் வாழ்வுக்கு தகுந்த சிகிச்சை அணுகுமுறைகளை வழங்குவதில் எங்கள் மருத்துவமனை முன் னோடி என்றும் ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய் யும் வகையில் தனிப்பட்ட உத்திகளை உருவாக்குதல், நோ யாளிக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்துவதில் தனி கவனம், புற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் தொடர் வெற் றியை தக்க வைப்பது எங்களது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டிடியூட் என்பது தமிழ் நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான புற்றுநோய் சிகிச்சை வழங்கும் அதிநவீன புற்றுநோய் மருத்துவமனை ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கோவையில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இணைந்து உலகத்தரம் வாய்ந்த வசதி இங்கு உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இதில் கீமோதெரப்பி, கதிர்வீச்சு, அறுவை சிகிச்சை மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான புற்று நோய் சிகிச்சைகளை இந்த மருத்துவமனை மூலம் வழங்கு கிறோம், கூடுதலாக 4பீ தொழில்நுட்பத்துடன் கூடிய TrueBeam STx, Brachytheraphy மற்றும் PET/CT போன்ற மருத்துவ வசதிகளையும் தங்கள் மருத்துவமனை நிபுணர்கள் நோயாளிகளுக்கு வழங்குகின் றனர் என்றும் கிருஷ்ணதாஸ் கூ றினார்.

படிக்க வேண்டும்

spot_img