fbpx
Homeபிற செய்திகள்வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காமராஜர் விருது

வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காமராஜர் விருது

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டந் தோறும் சிறப்பாக செயல்படும் அரசு மேல்நிலை,உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு காமராஜர் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த கல்வி ஆண்டிற்கான (2023 – 2024) சிறந்த மேல்நிலைப்பள்ளிக்கான காமராஜர் விருது வெள்ளியங்காடு அரசு மேல் நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்கும் நிகழ்வு நேற்று கோவை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்படும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி பள்ளியின் தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரனிடம் வழங்கினார்.

அப்போது, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பேபி, ஆசிரியர்கள் பரமேஸ் வரன்,அருள் சிவா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.மாவட்ட அளவில் சிறந்த அரசு மேல்நிலைப்பள்ளிக்கான காமராஜர் விருதினைப்பெற்ற வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

படிக்க வேண்டும்

spot_img