fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலை நகரில் என்சிசி முகாம் துவக்கம்

அண்ணாமலை நகரில் என்சிசி முகாம் துவக்கம்

அண்ணாமலைநகரில் தமிழ்நாடு 4-வது கூட்டு தொழில்நுட்ப கம்பனி சார்பில் வருடாந்திர கூட்டு பயிற்சி மற்றும் தல் சாணிக் தேர்வு முகாம் மே 23 முதல் ஜூன் 1 தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
இம்முகாமின் கட்டுப்பாட்டு அதிகாரி யாக தமிழ்நாடு 4-வது கூட்டு தொழில் நுட்ப கம்பெனியின் கட்டுப்பாட்டு அதிகாரி கர்னல் வாசுதேவ நாராயணன், சேனா மெடல் முகாம் துணை கட்டுப்பாட்டு அதிகாரியாக கர்னல் டி. வி.சுவாமி கண்காணித்து வருகிறார்கள்.

இம்முகாமில் கடலூர், விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இருந்து பள்ளி கல்லூரிகளில் பயிலும் 500 என்சிசி மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.
இப்பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் அணி நடைபயிற்சி வரைபட பயிற்சி, கூடாரம் அமைத்தல், ராணுவ தடை ஓட்டம், தூரம் அறிதல் மற்றும் துப்பாக்கி சுடுதல் கட்டளை பயிற்சி போன்ற ராணுவம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு செய்முறை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மேலும் அவசரகால விழிப்புணர்வு மற்றும் தலைமை பண்பு, சுகாதாரம், யோகா, தனி மனித தற்காப்பு பயிற்சி, விளையாட்டு போன்ற பயிற்சியும், பிளாஸ்டிக்
ஒழிப்பு, போதை பொருள் ஒழிப்பு, தொற்றுநோய் தடுப்பு போன்ற சமு தாய விழிப்புணர்வும் அளிக்கப்படுகிறது.

இதற்கான பயிற்சிகளை கல்லூரி மற்றும் பள்ளி தேசிய மாணவர் படை அதிகாரிகள் லெப்டினன்ட் சிற்றரசன், லெப்டினன்ட் பாண்டியன், லெப்டினன்ட் ஹேமாவதி, முதல் நிலை அதிகாரிகள் இரத்தினமணி,
ராஜசேகர், அனிதா, இரண்டாம் நிலை அதிகாரிகள் ஞானசேகரன், ஸ்டாலின் ஜோசப் மற்றும் ராணுவ ஜே சி ஓ சுபேதார் பினுஸ்,சுபேதார் மதுரை வீரன் போன்றவர்கள் தொடர்ந்து மாணவர்களை வழி நடத்தி பயிற்சி அளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img