fbpx
Homeபிற செய்திகள்பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க மண்டல கூட்டம்

பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க மண்டல கூட்டம்

கரூர் -கோவை சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் உள்ள கூட்டரங்கில், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க (சென்னை வட்டம்) மற்றும் கோவை மண்டல 27 வது, உறுப்பினர் சந்திப்பு கூட்டம், சங்கத்தின் மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்ட அரங்கில் குத்துவிளக்கை ஏற்றி வைத்து, கூட்டத்தை துவக்கினர். கூட்டத்திற்கு வருகை தந்த முக்கிய சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினர்.
இந்த கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் கிருபாகரன், கோவை மண்டல துணை பொது செயலாளர் செந்தில்குமார், கரூர் மாவட்ட உதவி பொதுச் செயலாளர் நம்பிராஜன், துணைத் தலைவர்கள் காஜா பக்ரு தீன், இமானுவேல் இளவேந்தன் உள் ளிட்ட வங்கி ஊழியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முக்கிய அம்சமாக, ஊழியர்கள் பணியாற்றும் போது ஏற்படும் பிரச்சனை, சந்தேகம், ஊழியர்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊழி யர்களின் சந்தேகத்திற்கு சங்க நிர்வா கிகள் விளக்கம் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் சிறப்புரையாற் றிய சங்கத்தின் பொது செயலாளர் கிருபாகரன், சங்க ஊழியர்கள் பணி நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், முடிந்தவரை தவறுகள் இல்லாமல் பணி மேற் கொள்ள வேண்டும் எனவும், சங்கத்தின் மூலம் போராடி பெற்ற உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறிய அவர், நமது தொழிற்சங்கம் பலமாக இருந்தால் தான், ஊழியர்களின் உரிமைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும் என விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பணி ஓய்வு பெறும் சங்கத்தின் துணை பொது செயலாளர் உஷாவிற்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img