fbpx
Homeபிற செய்திகள்கரூர்: அகில இந்திய கூடை பந்தாட்ட போட்டி

கரூர்: அகில இந்திய கூடை பந்தாட்ட போட்டி

கரூர், திருவள்ளுவர் மைதானத்தில் எல்.ஆர்.ஜி நாயுடு நினைவு 64ம் ஆண்டு அகில இந்திய கூடை பந்து ஆண்களுக்கான சுழற்கோப்பை போட்டி யும், 10ம் ஆண்டு பெண் களுக்கான கேவிபி சுழற்கோப்பைக்கான போட்டியும் மே 22ம் தேதி துவங்கி பகல் இரவு ஆட்டங்களாக நடை பெற்று வந்தது.

பெண்களுக்கான போட்டி லீக் முறையிலும், ஆண்களுக்கான போட்டி நாக்அவுட் முறையிலும் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் இன்று மாலை பெண்களுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், மும்பை மத்திய ரயில்வே அணியும், ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே அணியும் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 53க்கு 61 என்ற வித்தியாசத்தில் ஹூப்ளி தென்மேற்கு ரயில் வே அணி வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற ஆண்கள் அணிக்கான போட்டியில் இந்தியன் ஏர்போர்ஸ் நியூ டெல்லி அணியும், இந்தியன் நேவி லோனாவில்லா அணியும் மோதியது. பர பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 55க்கு 64 என்ற புள்ளிகள் வித்தி யாசத்தில் இந்தியன் நேவி லோனா வில்லா அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.

படிக்க வேண்டும்

spot_img