fbpx
Homeபிற செய்திகள்குன்னூரில் ‘ஆன்மா டைனர்’ புதிய உணவகம் திறப்பு

குன்னூரில் ‘ஆன்மா டைனர்’ புதிய உணவகம் திறப்பு

தென்னிந்தியாவில் படைப்பாற்றல் மிக்கவர்களுக்கான மிகவும் தனித்துவமான இடங்களில் ஒன்றான, தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள திபாலி சிகந்த் என்பவரால் நிறுவப்பட்ட MindEscapes தனது உணவகமான ஆன்மா டைனர் உணவகத்தை குன்னுரில் தொடங்கியுள் ளது. குன்னூரில் உள்ள பெட்ஃபோர்டில் உள்ள நீலகிரி சூப்பர் மார்க்கெட்டுக்கு மேலே அமைந்துள்ள இந்த உணவகம், சமையல் நுணுக்கம், சமூகப் பொறுப் பை பூர்த்தி செய்யும் வகையில் கட்டப் பட்டுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன செயலாளர் சுப்ரியா சாகு, கௌரவ விருந் தினராக கலந்து கொண்டு உணவத்தை தொடங்கிவைத்தார்.

ஆன்மா டைனர், பாலின சமத்து வத்தை வெளிப்படுத்தும் விதமாக முற்றிலும் பெண்களை கொண்டு இந்த உணவகமானது செயல்படவுள்ளது.
பிரிட்டிஷ் காலை உணவு, வாஃபிள்ஸ், பர்கர்கள், பேஸ்ட்ரிகள், கேக்குகள், சண்டேஸ், கிளாசிக் சாண்ட்விச்கள், பீன்ஸ் ஆன் டோஸ்ட், க்ரீமி சிக்கன் டோஸ்ட், பீச் மெல்பாஸ் மற்றும் பல வற்றை உள்ளடக்கிய காலை உணவு பட்டிய லுடன் நாள் முழுவதும் ஆன்மா டைனர் வழங்குகிறது.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அதன் அர்ப்பணிப்புக்கு உண்மையாக, ஆன்மாவில் வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு உணவுக்கும் “ஹில் ஆஃப் ஃப்ளவர்ஸ்” என்ற முயற்சிக்கு பங்களிக்கிறது. இந்த புது மையான திட்டமானது, ஒவ்வொரு உணவிற்கும் டெய்ஸி மலர்செடிகளை நடுவதன் மூலம் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பை வளப்படுத்துகிறது, இதனை Hillofflowers.com மூலம் ஆன்லைனில் கண்காணிக்கலாம்.

படிக்க வேண்டும்

spot_img