fbpx
Homeபிற செய்திகள்விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவு செயல் விளக்கம்

விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவு செயல் விளக்கம்

நாமக்கல் மாவட்டம், மல்ல சமுத்திரம் அடுத்த, மாமுண்டி கிராமத்தில் 79 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, சுனந்தா ரகப்பருத்தி செடியில், ஏ.ஐ செயற்கை துண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோன்களை பயன்படுத்தி பருத்தி செடிகளை தாக்கியுள்ள பூச்சிகள், புழுக்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், நேற்று, சிமா பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், ஹைதராபாத்தை சேர்ந்த பிரேனே என்ற பன்னாட்டு நிறுவனமும், வேளாண்மை துறையும் இணைந்து நோய்கள் மற்றும் ஊட்டச்சத்துகளின் தேவை உள்ளிட்டவற்றை துல்லியமாக ஆராய்ந்து அதற்கான பரிந்துரைகள் வழங்கினர். 

விவசாயிகளின் சந்தேகங்களுக்கு, பிரேனே நிறுவன சோசியல் ப்ராசஸ் லீடர் அருண்குமார் விளக்கமளித்தார். மேலும், ஆரம்ப நிலையில் உள்ள இந்த சோதனை முயற்சி விரைவில் பல்வேறு கட்டங்களை கடந்து விவசாயிகளுக்கு முழுபயனளிக்கும் வகையில் உருவாக்கப்படும் என தெரிவித்தார். 

சிமா நிறுவன மேலாண்மை இயக்குனர் வெங்கடராமச்சந்திரன் கலந்துகொண்டு  சிறப்பு பருத்தி சாகுபடி திட்டவிவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். செயலாளர் டாக்.ஆஷாராணி, நாமக்கல் வேளாண்நிலைய பேராசிரியர் அழகுதுரை, மல்லசமுத்திரம் வேளாண்மைதுறை துணை இயக்குனர் யுவராஜ், சிமா நிறுவன குழுவினர், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img