கோவை நாடாளுமன்ற திமுக முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் கோவை உப்பிலிபாளையத் தில் உள்ள ஸ்ரீ சாய் மஹாலில் நடைபெற்றது.
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து, கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கழக தலைமை நிலைய செயலாளர் டிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் காணொலி வாயிலாக, முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
இதில், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், திருப் பூர் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் குமார், வழக்கறிஞர் அணி அமைப்பாளரும், தலைமை முகவருமான அன்பு செழியன் மற்றும் பகுதி கழக செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், திமுக முகவர்கள் கலந்து கொண் டனர்.