fbpx
Homeபிற செய்திகள்இலவச சிலம்ப பயிற்சி முகாமில் பங்கேற்றமாணவ, மாணவிகள்

இலவச சிலம்ப பயிற்சி முகாமில் பங்கேற்றமாணவ, மாணவிகள்

கோவை புலியகுளம் பொன்னுசாமி- பி.கே.சுப்பராவ் சாண்டோ ஏ.குழந்தைசாமி நினைவு தேகப்பயிற்சி சாலையின் 46வது ஆண்டு விழாவும், 10ம் ஆண்டு கோடை கால இலவச சிலம்பப் பயிற்சி முகாம் நிறைவு விழாவும் புனித அந்தோணியார் ஆண்கள் ஆரம்ப பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நிகழச்சிக்கு எம்.ராஜ மாணிக்கம் தலைமை தாங்கினார்.

தலைவர் பி.பாபு, செயலாளர் பி.பழனிச்சாமி, என்.மாரிமுத்து, ஏ.குழந்தைசாமி, எம்.ஹரிக்குமார், எல்.வெள்ளிங்கிரி, ஜி.ரவி, ஏ.சின்ராஜ், கே.பிரபாகரன், எஸ்.மில்லர்தாஸ், பி.பிரதீப், ஜே.ஜான்பிரிட்டோ, ஆர்.சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மே 5ம் தேதி முதல் ஜூன் 2 வரை நடந்த இலவச சிலம்பம் பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.

பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் தமிழ் – ஆங்கில அகராதிகள் (டிக்ஸ்னரி) வழங்கப்பட்டது. இவற்றை இராமநாதபுரம் பகுதி திமுக செயலாளர் பசுபதி, இராமநாதபுரம் காவல்நிலையம் துணை ஆய்வாளர் இ.வசந்குமார், 66வது வார்டு மா மன்ற உறுப்பினர் பி.முனியம்மாள் பாலமுருகன், 66வது வட்ட திமுக செயலாளர் எஸ்.நவீன் பாலமுருகன், புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அமலோற்பமேரி, புனித அந்தோணியார் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோ.ஜான் பெர்னார்ட் ஆகியோர் வழங்கினர்.

முன்னதாக மாணவ மாணவிகள் பல்வேறு சிலம்ப விளையாட்டுகளை நிகழ்த்தி அசத்தினர்.
விழாவில் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img