fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் கல்லூரியில் சுற்றுச்சூழல் தின விழா

கேபிஆர் கல்லூரியில் சுற்றுச்சூழல் தின விழா

கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு கல்லூரியின் முதல்வர் முனைவர் சரவணன் மரக்கன்றுகளை நட்டார்.

“நமது நிலம், நமது எதிர்காலம்“ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களுக்கு உலக சுற்றுச்சூழல், அதை பேணுவதன் அவசியம் மற்றும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும்,தீமைகள், காடுகள் மற்றும் மரங்கள் அழிக்கப்படுவதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் கூறியதாவது: நிலையான எதிர்காலத்திற்கு இயற்கை வளங்களை போற்றி பாதுகாக்க மாணவர்கள் பங்காற்ற வேண்டும். இயற்கை வளங்களை மதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மாணவர்கள் நலப்பிரிவு மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட பிரிவும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தது.

படிக்க வேண்டும்

spot_img