fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இலவச கணினி பயிற்சி நிறைவு விழா

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இலவச கணினி பயிற்சி நிறைவு விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இலவச கணினி பயிற்சி வகுப்பு நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை, தமிழ்நாடு அரசுப் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அமெரிக்கா இந்தியா சியாட்டில் குழு நிதி உதவியுடன் பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவிகளுக்கான இலவச கணினி பயிற்சி வகுப்பு மூன்று மாதங்கள் நடைபெற்றது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் உதவிபேராசிரியர் எஸ்.பி.பாலமுருகன் வரவேற்றார். திட்ட முதன்மை ஆய்வாளர் கே.ஜெயபிரகாஷ் பயிற்சியின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். கணினி மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் என்.புவியரசன் நிறைவு ரையாற்றினார்.பல்கலைக்கழக உள்தர கட்டுப்பாட்டு மைய துணை இயக்குநர் பரதன் சிறப்புரையாற்றினார்.
முடிவில், 42 பயிற்சி முடித்த மாணவிகளுக்கு பயிற்சிசான்றிதழ் வழங்கப்பட்டது.பேராசிரியர் கே.பிரவீனா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்புச் செயலர் கே.சாய்லீலா செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img