fbpx
Homeபிற செய்திகள்மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிய கோவை நிர்மலா கல்லூரி

மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிய கோவை நிர்மலா கல்லூரி

உலக சுற்றுச்சூழல் தினமானது ஜூன் ஐந்தாம் தேதி நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது. கோவை நிர்மலா மகளிர் கல்லூரியானது பொதுமக் கள், இளம் தலைமுறையின ராகிய மாணவியர்கள் ஆகியோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக் கில் பல்வேறு நிகழ்ச்சிகளை அதாவது விதைப்பந்து வழங்குதல், விதைப்பந்துகளை மலைச்சரிவுகளில் தூவுதல், மரக்கன்று வழங்குதல் ஆகியவற்றை நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக தற்போது கல்லூரியில் காலை 9 மணி அளவில் சுற்றுச்சூழலைக் காக்கும் பொருட்டுப் புவி வெப்ப மயமாதலைத் தடுக்கும் விழிப்புணர்வை இளம் தலைமுறையினரிடையே ஏற்படுத்தும் நோக்கில் புதிதாகத் தொடங்க இருக்கும் கல்வியாண்டில் கல்லூரிக்கு வருகை புரிந்த இளநிலை இரண்டாம் ஆண்டு, மூன்றாம்ஆண்டு, முதுநிலை இரண்டாம் ஆண்டு, ஆராய்ச்சி மாண வர்கள் ஆகியோருக்குக் கல்லூரி நிருவாகம் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் மரக்கன்றுகள் வழங்கி இன்முகத்துடன் வரவேற்கப்பட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img