fbpx
Homeபிற செய்திகள்கூடை பந்து போட்டியில் பெரியகுளம் அணி முதலிடம்

கூடை பந்து போட்டியில் பெரியகுளம் அணி முதலிடம்

தேனி எல். எஸ். மில்ஸ் கூடைப்பந்து கிளப் சார்பில், தேனி மாவட்ட அளவிலான 2-ம் ஆண்டு கூடை பந்தாட்ட போட்டிகள் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூடை பந்தாட்ட மைதானத்தில் கடந்த 28ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடந்தது.

நாக் அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் பகல் இரவு என மின்னொளியில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் மாவட்ட அளவில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொண்டன. லீக் சுற்று முடிவில் நேற்று மாலை இறுதி போட்டி நடந்தது.

இறுதிப் போட்டியில் தேனி எல்.எஸ்.மில்ஸ் அணியும், பெரியகுளம் பாப் அணியும் மோதின. இதில் பெரியகுளம் பாப் அணி 95க்கு 90 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பெற்று கோப்பை வென்றது.

இரண்டாம் இடத்தை தேனி எல் எஸ் மில்ஸ் அணி வென்றது. மூன்றாம் இடத்தை கம்பம் பென்னிகுக் அணியும் நான்காம் இடத்தை பெரியகுளம் எஸ்ஜேஎஸ்சி அணியும் பெற்றது.

இறுதிப் போட்டியின் முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தேனி எல்.எஸ் மில்ஸ் நிர்வாக இயக்குனரும் எல்.எஸ். மில்ஸ் அணி தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சாந்தி மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.

இதில் தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி.சிவபிரசாத் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகளையும் பரிசு தொகையையும் வழங்கி பாராட்டினார். போட்டியில் முதல் இடம் பெற்ற அணியினருக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும் இரண்டாம் இடம்பெற்ற அணியினருக்கு ரூ.15 ஆயிரமும் மூன்றாம் இடம் பெற்ற அணியினருக்கு ரூ.10 ஆயிரமும். 4-ம் இடம் பெற்ற அணியினருக்கு ரூ.5 ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இதில், தேனி மாவட்ட கூடை பந்தாட்ட கழகத் தலைவர் சிதம்பர சூரியவேலு, மாவட்ட கூடை பந்தாட்ட கழக துணைத் தலைவர் டாக்டர் செல்வராஜ், தேனி – அல்லிநகரம் நகர்மன்ற துணைத் தலைவர் வக்கீல் செல்வம், தேனி கூடைப்பந்தாட்ட கழக உப தலைவர் ராமராஜ், பொருளாளர் பிரபு, தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழக கமிட்டி பயிற்சியாளர் சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் எல்.எஸ்.மிலஸ் முதன்மை நிதி அலுவலர் ஞான குருசாமி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img