fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 108 டாக்டர்களுக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான விருது விழா

கோவையில் 108 டாக்டர்களுக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான விருது விழா

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள், இந்திய மருத்துவ சங்கம் (கோவை), நேரு நகர் லயன்ஸ் சங்கம், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில், சிறந்த மருத்துவர் விருது மற்றும் சிறந்த மருத்துவ சேவைக்கான விருது வழங்கும் விழா, இந்திய மருத்துவ சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நடை பெற்றது.

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்ட கவர்னர் டாக்டர் நித் யானந்தம் தலைமை தாங்கி, சிறந்த டாக்டர் களுக்கு விருது வழங்கி னார். ஐ.எம்.ஏ., போர்ட் ஆப் இந்தியா தலைவர் மருத்துவமனை ரவிக் குமார், ஐ.எம்.ஏ., தலைவர் டாக்டர் பிரியா கார்த்திக் பிரபு, தேசிய செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு, செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராமலிங்கம் முன் னிலை வகித்தனர்.

விழாவில் லயன்ஸ் சங்கங்க ளின் முன்னாள் கவர்ன ரும், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் பழனிசாமி, கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.

இதில், 35 சங்கங்கள் சார்பில், மனநல மருத்துவர்கள் மோனி உட்பட, 97 டாக்டர்களுக்கும், சிறந்த 11 மருத்துவ சேவை புரிந்தவர்களுக்கும் என மொத்தம், 108 பேருக்கு சிறந்த மருத் துவர் விருது மற்றும் சிறந்த மருத்துவ சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

விழாவில் லயன்ஸ் வட்டார தலைவர்கள் மோகன்ராஜ், ஸ்ரீதர்,திவாகர், வெங் கடேஸ்வரன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தேசிய செயலாளர் செந்தில் குமார்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img