fbpx
Homeபிற செய்திகள்13 பழங்குடியினர் வீடு கட்ட ரூ.5.98 லட்சம் நீலகிரி -ஆட்சியர் அருணா வழங்கினார்

13 பழங்குடியினர் வீடு கட்ட ரூ.5.98 லட்சம் நீலகிரி -ஆட்சியர் அருணா வழங்கினார்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 13 பழங்குடியின மக்கள் வீடுகள் கட்ட இடம் வாங்குவதற்காக ரூ.5.98 லட்சம் மதிப்பீட்டிலான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா வழங்கினார்.

அதன்படி, கோத்தகிரி வட்டத் திற்குட்பட்ட கடினமாலா ஊராட்சி, கொப்பையூர் பழங்குடியின பகுதியில், 13 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மழை காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால், அந்த பழங்குடியின மக்களின் பாதுகாப் பினை கருத்தில் கொண்டு, சென் னையைச் சேர்ந்த ஸ்ரீனிவாசா சேவைகள் அறக்கட்டளை சார்பில் ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.46,000/- வீதம் ரூ.5.98 லட்சம் வழங்கியதை, மாவட்ட ஆட்சித்தலைவர் பய னாளிகளுக்கு காசோலையாக வழங்கினார். மேலும், பிஎம் ஜன்மன் திட்டத்தின்கீழ், மேற்கண்ட 13 பழங்குடியின குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடவுள்ளது.

இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், கோத்தகிரி வட்டாட்சியர் கோமதி, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயா, அண்ணாதுரை, கடினமாலா ஊராட்சித்தலைவர் சாந்தி, சென்னை ஸ்ரீனிவாசா சேவைகள் அறக்கட்டளையின் நிர்வாகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img